இது குறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது; வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ1,068ல் இருந்து 1,118 ஆக உயர்த்தி ஏழை-எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது ஒன்றிய மோடி அரசு.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூ 400க்கு விற்ற சிலிண்டர் இன்று ரூ 1,118. இது தான் ஒன்றிய மோடி அரசின் சாதனை, மக்களுக்காக தான் அரசாங்கமே தவிர அரசுக்குகாக மக்கள் அல்ல,
இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையேல் மக்களுக்காக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டத்தில் ஈடுபடும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.