திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, ஜோதிபாசு நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் மைதானத்தில் 25 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் 3,000 பேருக்கு அன்னதானம் வழக்கும் நிகழ்வு நடைபெற்றது
இவ்விழாவிற்கு, சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், பழனிமகாராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, ஒன்றிய துணைச்செயலாளர் வசந்தகுமாரி, செயலாளர் சந்திரசேகர், மகளிர் அணி சண்முகத்தாய், வார்டு பிரதிநிதிகள் சரஸ்வதி, வீரகுமார், முனியம்மாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.
இதில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதாராதா கிருஷ்ணனுக்கு ஊர்மக்கள் சார்பில் மலர்தூவி வரவேற்றனர். பின்னர் விநாயகர் கோவிலில் வழிபட்டு கொடியேற்றி வைத்து அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், முதல்வரின் 70வது பிறந்தநாள் ஒட்டுமொத்த தமிழர்களில் திருநாளாக கொண்டாடப்படுகிறது. 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் உழைக்க கூடிய முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம். எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு பணியாற்றி தமிழகம் முழுவதும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு தினமும் ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அதே வேளையில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மீது தனி அக்கறை கொண்டவர். இனி வர இருக்கின்ற காலம் முக்கிய காலமாக இருக்கிறது. அதை எதிர்நோக்கி அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். என்று பேசிய பின்னர் 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்களுடன் 5 வகையான உணவுகளுடன் கூடிய அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கூட்டுறவு வங்கிதலைவர் விபிஆர் சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சிவகுமார், தர்மலிங்கம், செல்வகுமார், தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர் சிவகுமார், அவைத்தலைவர் முருகன், பொருளாளர் மாரியப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், ஆனந்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் ஆம்ஸ்ட்ராங், சதிஷ்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச்செயலாளர் காமராஜ், பொன்னுச்சாமி, சரவணன், காசி, துரை, உத்திரகுமார், முருகன், வேல்ராஜ், பூசாரி முருகன், காஜா மைதீன், முத்துராஜ், பொன்ரத்தினம், மாரி, மகாராஜா, தனபாலன், குருசாமி, இம்மானுவேல், நெல்சன், ராமசந்திரன், ஜெபராஜ், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மகளிர் அணி நூர்ஜஹான் அப், மற்றும் ராயப்பன், சந்திரசேகர், முத்துகிருஷ்ணன், கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், கௌதம், ஊரக குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, மாரியப்பன், வேல்ராஜ், மைக்கேல் ராஜ் செய்திருந்தனர். இறுதியாக, இசக்கி முத்து நன்றியுரையாற்றினார்.