Thupparithal
அரசியல்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி‌.கே. வாசன் பிறந்தநாள் விழா; தூத்துக்குடியில் ஆலோசனை கூட்டம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் பிறந்தநாள் விழா வருகின்ற 28.12.22 புதன்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தலைமையிலும், கீரனூர் முருகேசன், தங்கத்தாய் பிரபாகரன், ஆகியோர் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அவையாவன; சாத்தான்குளம் அரசு பொது மருத்துவமனையில் அன்றைய தினம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.

தூத்துக்குடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனே சீரமைக்க வேண்டியும், தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை பாலத்தில் சிக்னல் அமைக்கவும், புதுக்கோட்டை மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டியும், வீட்டு வரி, மின்சார கட்டணம், பால் விலை உயர்வு, உடனடியாக திரும்பப் பெற வேண்டியும், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பெண் மகப்பேறு மருத்துவர்கள் உடனடியாக நியமிக்க வேண்டியும், முத்தையாபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகளை உடனடியாக முடிக்கவும் ஸ்ரீவைகுண்டம் முக்காணி வரை தாமிரபரணி ஆற்றில் கருவேல மரங்களையும் மற்றும் அமலை செடிகளையும் அகற்ற வேண்டும்.

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில்; மாநகரத் தலைவர் ரவிக்குமார், வட்டார தலைவர்கள் ஆறுமுகநேரி சுந்தரலிங்கம், சாத்தான்குளம் மாறன், வென்பூர் திருப்பதி, ஸ்ரீவைகுண்டம் ஐயம்பாண்டி, ஆழ்வை இளையராஜா, நகரத் தலைவர்கள் சாத்தான்குளம் விஜய், ஆழ்வை பொன்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் மூகச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் கணேஷ் ஐயாதுனர, வட்டாரச் செயலாளர் முரளி, கார்த்திக், காமராஜ், நம்பிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!

Admin

ராகுல்காந்தி எம்பியின், ஒற்றுமை பயணம் யாத்திரை நிறைவு; மக்களுக்கு கடிதம் மூலமாக அளித்த செய்திகளை, துண்டு பிரசுரம் மூலம் விநியோகம் செய்த தூத்துக்குடி மாநகர் காங்கிரசார்!.

Admin

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 17ஆம் ஆண்டு துவக்க விழா; முன்னிட்டு கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!