இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்பியின், ஒற்றுமை பயணம் யாத்திரையானது கடந்த 2022 செப்டம்பர் 7 அன்று கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி 116 நாட்கள், 4,080 கிலோமிட்டர், 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 12 பொதுகூட்டங்கள், 100 தெருமுனை கூட்டம், 275க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் ஏராளமான மக்களை சந்தித்து (29.01.2023) நேற்றைய தினம் காஷ்மீர் சென்றடைந்து நடைப்பயணத்தை முடித்து கொண்டார்.
ராகுல்காந்தி எம்பி மக்களுக்கு கடிதம் மூலமாக அளித்த செய்திகளை, தமிழகம் முழுவதும் காங்கிரசார் துண்டு பிரசுரம் மூலம் மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கட்சியினர் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.
முன்னதாக, ராகுல்காந்தி எம்பியின் சரித்திர சாதனையை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து காங்கிரசார் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மகாத்மாகாந்தி நினைவு தினமான இன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் ராஜன், சேகர், ஐசன்சில்வா, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், அருணாசலம், பிரபாகரன், மார்க்கஸ், ராதாகிருஷ்ணன், ரஞ்சிதம் ஜெயராஜ், சின்னகாளை, மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், நெப்போலியன், ஜோபாய் பச்சேக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மெர்லின் பாக்கியராஜ், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், கிருஷ்ணன், அருண், கருப்பசாமி, ஜெபமாலை, மைக்கேல் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்