Thupparithal
அரசியல்

சோனியா காந்தி பிறந்த நாள்; ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர் பெருமாள்சாமி கேக் வெட்டி கொண்டாட்டம்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியின் 76 வது பிறந்த நாளை இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி
தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர்
முத்துகுட்டி முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில், வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகர் செயலாளர், இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், Sc பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, SC பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், வெள்ளப்பட்டி ஜேசுதாசன், INTUC முனியசாமி,
தெற்கு மண்டல பொது செயலாளர் தனசேகர்,
மீனவரணி மிக்கேல் குரூஸ்,
ஊடக பிரிவு சுந்தராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பிசங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி ,உமாமகேஸ்வரி, சிவாஜி விஜயா,வழக்கறிஞர்செல்வம்,ராஜபாண்டி, பேரையா, வர்த்தகப் பிரிவு வட்டார தலைவர் செந்தூர் பாண்டியன், சுரேஷ் குமார், சேவியர் மிஷியர், வாசிராஜன், பால்துரை, ஜோதிராமலிங்கம், ஜான்வெஸ்லி, பாலசுப்ரமணியன், பாலகிருஷ்ணன், ஜீவபாஸ்கர், யேசுதாஸ், அய்யாதுரை, கண்ணன்காங்கிரஸ் நிர்வாகிகள்முத்து ராஜா, முத்து மாலா, சுமித்ரா, குணசீலி, சோனியா. INTUC சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, கௌதம், பாலன், நவநீதன்மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர்கலந்து கொண்டனர்.

Related posts

மாப்பிள்ளையூரணி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

Admin

பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் வெளியில் போக முடியவில்லை… அந்த நிலையில் திமுக ஆட்சி உள்ளது..வி கே சசிகலா தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி..!

Admin

கலைஞர் நூற்றாண்டு விழாவை பொறியாளர் அணி சிறப்பாக கொண்டாட வேண்டும்- அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு…!

Admin

Leave a Comment

error: Content is protected !!