Thupparithal
ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது; உயர் நீதிமன்றம்.

திருவிழா உட்பட எந்த நேரத்திலும் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்திற்குள் யாரையும் தங்க அனுமதிக்க மாட்டோம் என, நிர்வாகம் உறுதியளித்த அதே நிலையை பராமரிக்க வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சித்ராங்கதன் தாக்கல் செய்த பொது நல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின்போது பக்தர்கள் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பர். தற்போது, கந்த சஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோவில் உள் பிரகாரத்திற்குள் தங்கி, பூஜை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, சட்டவிரோதம்.

கந்த சஷ்டியின்போது கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள அனுமதி கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: காலத்தின் சோதனைகளைத் தாங்கி நிற்கும் கோவில்கள் தொல்லியல் அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். ஏனெனில் அவை அசாதாரணமான திறமையுடன் கட்டப்பட்டுள்ளன.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை பலமடங்கு அதிகரிக்கிறது. இங்கு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, கோவிலின் புனிதத்தை பேண வேண்டியுள்ளது.

‘விரதம் மற்றும் இதர மத நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் எந்த ஒரு பக்தரும் திருவிழா அல்லது வேறு நாட்களில் கோவிலின் உட்பிரகாரத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என கோவில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

அது நியாயமானது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. கோவில் நிர்வாகம் உறுதியளித்ததை இந்த நீதிமன்றம் பதிவு செய்கிறது. அதே நிலையை பராமரிக்குமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

கோவில் வளர்ச்சிப் பணிக்காக அரசு ஒதுக்கிய 300 கோடி ரூபாயை நியாயமாக பயன்படுத்தி, முடிந்தவரை விரைவாக முடிக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Related posts

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு, ஆடி வரும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை தர வேண்டிய இடத்தில் இப்படி அசிங்கத்தை கொடுக்கலாமா அறநிலையத்துறை? விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

Admin

கேட்ட வரம் அளிக்கும் குலசை முத்தாரம்மன்; இனி வரும் காலங்களில் குலசைக்கு அப்புறம் தான் மைசூர் தசரா என மாறிவிடும்…பக்தர்கள் நம்பிக்கை…!

Admin

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!