தூத்துக்குடி “ஸ்ரீ ஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம்” “ஸ்ரீபத்மாவதி குருகுலம்” சார்பில் நடைபெற்ற இறுதிநாள் முப்பெரும் விழாவிற்கு பெங்களுர் வேத ஆகம ஸம்ஸ்க்ருத மஹா பாடசாலை “ஸ்ரீ ஸ்ரீகுருகுலம்” முதல்வர் சிவாகம கலாநிதி சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமை வகித்தார். முத்தமிழ் குருமணி க்ரியாக்கிரமஜோதி வாகீசவாரதி சகலாகமசங்கிரர் சிவாகம கலாநிதி விஜய சோம சேகர சிவாச்சாரியார், ஸ்ரீ கதிர்மலை சிவன் தேவஸ்தானம் கன்னாகம் சிவாகம கலாநிதி சர்வேஸ்வரக் குருக்கள், இலங்கை இந்து குருமார் அமைப்பு தலைவர் வைத்தீஸ்வர குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் ஸ்தானிகம் “ஸ்ரீ சண்முகர்” பூஜா கைங்காயம் குமார் பட்டர் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், “ஸ்ரீ ஆலால சுந்தரவேத சிவாகம வித்யாலயம்” முதல்வர் செல்வம் பட்டர் பேசுகையில், ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் ஒவ்வொரு மரியாதை உண்டு. சிலருக்கு பதவியை வைத்து மரியாதை இருக்கும். சிலருக்கு செயல்பாடுகளை வைத்து பதவிக்கு மரியாதை இருக்கும் அந்த வகையில் நம்முடைய மேயர் மக்கள் பணி செய்வதற்கு தான் நாங்கள் பொறுப்புக்கு வந்துள்ளோம் என்பதை உணர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த சிறப்பு எல்லோருக்கும் அமையாது சமீபத்தில் சிவன்கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது அப்பகுதியில் சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்று நேரில் சந்தித்து பேசும் போது மணி 3 இருக்கும். சாப்பிட செல்லவில்லையா? என்று கேட்ட போது கடமை தான் முக்கியம் என்று கடமையோடு பணியாற்றி நாங்கள் வைத்த கோரிக்கையை தானே முன்நின்று அதை செய்து கொடுத்தார். இது போன்ற பணிகள் செய்பவர்களுக்கு மேலும் பல உயர்பதவிகள் கிடைக்க வேண்டும். என்று பேசினார்.
பின்னர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்துரை வழங்கி பேசுகையில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக பழகி வருகிறேன். அப்போது கொண்ட எளிமைதான் இப்போதும் அவர்களிடம் இருக்கிறது. இந்த தென்மாவட்ட பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த பெருமை இவர்களை தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது. உங்களிடம் பயின்ற மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்ட போது தமிழகம், இந்தியா கடந்து வெளிநாடுகளிலும் ஆன்மீக பணியில் இருக்கிறார்கள். என்று தெரிவித்தார்கள்.
பழைய கலாச்சாராத்தை மறந்து விடக்கூடாது. காலம், காலமாக வாழையடி, வாழையாக இங்கு பயிலும் மாணவர்கள் பணி உலகம் முழுவதும் பரவ வேண்டும். அதன் மூலம் தூத்துக்குடிகாரர்கள் பாசக்காரர்கள் என்பதை நிலைநிறத்த வேண்டும். இறைவன் அருளாசியோடு எல்லா பணியும் நல்லமுறையில் நடைபெற வாழ்த்துகிறேன். என்று பேசினார்.
இதனை தொடர்ந்து சமயத் தொண்டினை கௌரவித்து பலருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில், சண்முகபுரம் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி சுகாதாரகுழு தலைவருமான சுரேஷ்குமார், பட்டர்கள் சுப்பிரமணியன், கண்ணன், சண்முகம், மணி, ஐயப்பன், சங்கர், சோமாஸ், குமார், சோமசுந்தரம், மற்றும் நாகலட்சுமி, பரமேஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவாகம் க்ரியா விசாரத விக்னேஷ் சிவம் நன்றியுரையாற்றினார்.