Thupparithal
ஆன்மிகம்

தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட “அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது.

செவ்வாய்கிழமை அன்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் திருவிளக்கு பூஜையுடன் சுவாமிகளுக்கு கும்பம் ஏற்றும் பூஜையும் நடைபெற்றது.

பின்னர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

கொடைவிழாவை யொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கோவில் நிர்வாக கமிட்டியாளர்கள் வாரவழிபாடு மாதர் சங்கத்தினர் கோவில் கைங்கர்ய பக்தர்கள் சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடி மேலசண்முகபுரம்,, சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில்களில் பிரமாண்டமாக நடைபெற்ற வரலட்சுமி பூஜை..!

Admin

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பூஜை நேரம் மாற்றம்.

Admin

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அமைச்சர், மேயர், கலெக்டர், எஸ்.பி, ஆணையர், முன்னாள் அமைச்சர், பங்கேற்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!