Thupparithal
ஆன்மிகம்

தூத்துக்குடி: கிறிஸ்தவ ஆலயங்களில் தவக் காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கும் வகையில் ஆண்டு தோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுசரிக்கிறார்கள். இவ்வாண்டுக்கான தவக்காலம் இன்று தொடங்கியது. இதையொட்டி, சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை ஆலயங்களில் நடைபெற்றது.

புனித லூர்து அன்னை ஆலயத்தில் காலை 6 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை ஆன்றனி புரூனோ நிறைவேற்றினார். கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.

தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயம், திரு இருதயப் பேராலயம், புனித அந்தோனியார் திருத்தலம், யுதா ததேயு திருத்தலம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள். சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இதை தொடர்ந்து, வெள்ளிக் கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் 6-ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது.

அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Related posts

ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 சங்கு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்.

Admin

செல்வம் பட்டரிடம் பயின்ற தூத்துக்குடி மாணவர்கள் பாசக்காரர்கள் என்று உலகம் முழுவதும் தெரியப்படுத்த வேண்டும்-மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல் பேச்சு!.

Admin

அழுகிய முட்டை சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி? அமைச்சர் கீதாஜீவன் கூறிய பதில் என்ன??

Admin

Leave a Comment

error: Content is protected !!