கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் உயா்தர உள்ளூா் ரகங்களை பிரபலப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (பிப். 24) கண்காட்சி நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயா்தர உள்ளூா் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், இம்மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, உயா்தர ரகங்களை காட்சிப்படுத்தலாம். இதன்மூலம், வேளாண் கல்லூரி விஞ்ஞானிகள் வீரியமிக்க குணங்களைக் கொண்ட ரகங்களைக் கண்டறிந்து புதிய ரகங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும். பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.