Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாநகரில் காமராஜர் சிலை அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் 5வது வார்டு பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆலய வரிதாரர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் ஆதரவுடன் கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் காமராஜர் சிலை அமைக்க அனுமதி கேட்டு அப்பகுதி ஆலய தர்மகர்த்தா ஆறுமுக பாண்டி தலைமையில் காரிய தரிசி தங்க குமார் முன்னிலையில் இன்று (செப்30) மாவட்ட ஆட்சியர் லட்சுமிதிபதியை சந்தித்து ஆலய நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

இது குறித்து ஆலய தர்மகர்த்தா ஆறுமுக பாண்டி கூறும் போது, தங்களது பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான பிள்ளையார் கோவில் அமைந்துள்ள இடத்தில் தங்களது சொந்த இடத்தில் காமராஜர் சிலை அமைப்பதற்கு மண்டபம் கட்டி உள்ளோம். அந்த மண்டபத்தில் காமராஜர் சிலை அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த ஆலயத்தின் 2,000 வரிதாரர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் விருப்பப்படுகிறார்கள். எந்தவிதமான சாதி மோதல்களும் இல்லாத அந்த பகுதியில் இந்த சிலை அமைப்பதால் எவ்வித சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படாது எனவே இந்த இடத்தில் சிலை அமைக்க அனுமதி தர வேண்டும் என்பதாக மனு கொடுத்துள்ளோம். ஆகவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து சிலை அமைக்க உதவி செய்வார் என நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார்..

Related posts

டிச.31க்குள் தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்; ஆட்சியா் தகவல்!.

Admin

அதிமுக முன்னாள் எம்.பி, ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் கனிமொழி எம்.பி 6 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பணி செய்வது மட்டுமின்றி கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கண்டு வருகிறார்-2ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம்!.

Admin

தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!