பிரதமர் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் குறித்து தூத்துக்குடி பெருமாள்புரத்தில் பாஜக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் கவுன்சிலர் லதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மகளிரணி நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள், தொழில் கடன், கிராமப்புற மக்கள் நலன் கருதி ஜல் ஜீவன் குடிநீர் திட்டம், என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தமிழகத்திற்கு அதிக அளவில் வழங்கப்பட்டடுள்ளது. ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக அரிசியும், கோதுமையும் வழங்கி வருகிறது. ஆனால் இதுபோன்ற திட்டங்களை எல்லாம் மாநில அரசு செய்வது போன்று தமிழக அரசும் முதலமைச்சர் ஸ்டாலினும் தெரிவித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய ஏமாற்று வேலை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதியை கூறிவிட்டு இப்போது சில நடைமுறைகளை தெரிவிக்கின்றனர். இப்படி ஏமாற்றும் தி.மு.க விற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தமிழகத்தின் முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும். அதற்கு அனைத்து மகளிரணியினரும் வீடு தோறும் சென்று மத்திய அரசு செய்த சாதனைகளையும், திட்டங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று பேசினார்கள்.
கூட்டத்தில், வட்ட மகளிரணி தலைவர் தேன்மொழி, துணை தலைவர்கள் தங்கம், சுதா, மகளிரணி மாவட்ட பார்வையாளர் லதா, மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் உஷாதேவி, கல்வியாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் வெள்ளத்தாய், ஆலயப் பிரிவு மாவட்டச் செயலாளர் அன்னபூர்ணா சமூக ஊடகப் பிரிவு மாநிலப் பொறுப்பாளர் அனுசியா, மேற்கு மண்டல மகளிர் அணித்தலைவர் சண்முக லீலாவதி, வடக்கு மண்டல மகளிர் அணித்தலைவர் சுபா சங்கரி, கிழக்கு மண்டலத் தலைவர் ஆனந்த செல்வம், மேற்கு மண்டல பொதுச்செயலாளர் லெட்சுமி கொரைரா உள்பட பலர் கலந்து கொண்டனர்..