அதிமுக அமைப்பு ரீதியாக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற்றதை தடை செய்ய வேண்டும் என்று ஒ. பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இருதரப்பு வழக்கறிஞர்களின் நேரடி வாதங்களையும், எழுத்துப்பூர்வமான ஆவணங்களையும் ஆய்வு செய்த நீதிபதி குமரேஷ்பாபு, ஓபிஎஸ் தரப்பினர் மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனால் முறையாக அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமியை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், எட்டயபுரம் பேரூர் கழகத்தின் சார்பாக எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பும், பேருந்து நிலையம் முன்பும் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், அவைத்தலைவர் செ.கணபதி, மாவட்ட பிரதிநிதிகள்; வேலுச்சாமி, சுப்புலட்சுமி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்ட்டன் பிரபு, சின்னத்துரை, சிவா என்ற சிவசங்கர பாண்டியன், மோகன், சீனா என்ற முத்துகிருஷ்ணன், கார்த்தி, மணி, மகளிர் வார்டு செயலாளர்கள் செல்வி, சாந்தி, ரத்தினம் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.