தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் காசி என்பவர் ஓசணூத்து செல்லும் சாலை ஓரத்தில் சுமார் 2 ஆண்டுகளாக பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்..
அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. சிறிய அளவு கடையில் தீப்பற்றிய நிலையில், நேரம் செல்ல, செல்ல தீ ‘மல மல’ வென பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடையில் இருந்த நான்கு, இருசக்கர வாகனம் இதில் முற்றிலுமாக எரிந்து நாசமாகின.
பின்னர், அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரால் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலாக பொருட்கள் எரிந்து நாசம், மேலும் இந்த திடீர் தீ விபத்தால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்து குறித்து பசுவந்தனை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…