76 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் (ஆக 15), கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை தொடங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, பாஜக முன்னாள் தூத்துக்குடி (ஒருங்கிணைந்த) மாவட்ட தலைவர் M.பாலாஜி தனது பகுதி மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்கு ஏராளமான தேசிய கொடி வாங்கிச் சென்றார். இதில், தூத்துக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் M.பொன்னையா, உதவி அஞ்சல் நிலைய அதிகாரி E.பாலாஜி, பாஜக அமைப்பு சாரா சேவை இயக்கம் மாவட்ட துணை தலைவர் C.சுந்தரேச விஸ்வநாத், மாவட்ட தகவல் தொழில் நுட்ப சமூக ஊடக பிரிவு செயலாளர் S.செல்வ பாலன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்…