இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில், 500 கி.மீ தூரம் புறா பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி ரேசிங் பீஜியன் ஓபன் ரேஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் இணைந்து புறா பந்தயம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் துவங்கியது. இதில் பந்தய புறாக்கள் சுமார் 500 கி.மீ தூரம் ஓய்வின்றி பறந்து வந்து பந்தய இலக்கை அடைந்தன.
இப்போட்டியில் ஏ.ஆர்.ராஜேஷ் என்பவரின் புறா 5 மணி நேரம் 30 நிமிடத்தில் பறந்து வந்து முதல் பரிசை பெற்றது. பொன்ராஜ் என்பவரது புறா 5 மணி 35 நிமிடத்தில் பறந்து வந்து இரண்டாம் பரிசை பெற்றது. ராஜேஷ் என்பவரது புறா 5 மணி நேரம் 37 நிமிடத்தில் பறந்து வந்து 3வது பரிசை பெற்றது.
போட்டியில், ஒருங்கிணைப்பாளர் டைகர் வினோத் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ரைமன் சாவியோ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் துரை கலந்து கொண்டு ஊக்கப்பரிசு வழங்கினார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்