மாநில அளவிலான JUNIOR JUDO போட்டி தேனியில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .
இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தூத்துக்குடி “ஸ்பார்டன்ஸ் ஸ்போட்ஸ்”அகடமியின் சார்பாக 20 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர் .
இப்போட்டியில் கணேஷ் குமார் என்ற மாணவன் 73 கிலோ எடை பிரிவில் தங்க பதக்கம் வென்று அசத்தினார் மேலும் தமிழகத்தின் சிறந்த ஜூடோ வீரர் என்ற பட்டத்தையும் வென்றார்.
மேலும், ரோசன் சாம், வெள்ளி பதக்கமும் சந்தானம், ஈஸ்வர மூர்த்தி, ஷீபா மற்றும் பிரியா ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
வெற்றிபெற்ற மாணவர் மற்றும் மாணவிகளை தூத்துக்குடி “ஸ்பார்டன்ஸ் ஸ்போட்ஸ்” அகடமியின் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் சுரேஷ் குமார், பாட்ஷா, ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் .
இப்போட்டியில் தங்கம் வென்ற மாணவர் அடுத்த மாதம் ஜார்கண்டில் வைத்து நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்ச்சிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.