தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ முன்னிலையிலும், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதலாவதாக, மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கையேடுத்து சரி செய்து கொடுத்த மேயர், ஆணையர் அவர்களுக்கும் மாமன்ற உறுப்பினர்கள் நன்றியை தெரிவித்தனர்.
மேயர் ஜெகன் கூறுகையில், டூவிபுரம் மேற்கு பகுதி இனி அண்ணாநகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறினார்.
இந்த தீர்மானத்தை வரவேற்று உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கூட்டத்தில், மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி கணக்கு குழு தலைவரும் 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, நகர அமைப்புக்குழு தலைவர் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, சரவணக்குமார், சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, அந்தோணிபிரகாஷ், மார்சலின், ஜெயசீலி, ஜெபஸ்டின்சுதா, தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, கண்ணன், ராமர், சீனிவாசன் (எ)ஜான், சோமசுந்தரி, ஜான்ஸிராணி, மகேஸ்வரி, மரியகீதா, சரண்யா, அதிர்ஷ்டமணி, பொன்னப்பன், விஜயலட்சுமி, பாப்பாத்தி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸிலின், ராஜேந்திரன், வைதேகி, சரவணக்குமார், முத்துவேல், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், விஜயகுமார், மற்றும் பல மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.