மக்கள் முன்னேற்ற பேரவையின் தூத்துக்குடி மாவட்ட, ஒன்றிய, பொருப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பிரையண்ட் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் அறிவுறுத்தலின்படி, 2023 மார்ச் மாதம் தூத்துக்குடியில் நடைபெற உள்ள தேவேந்திரகுல வேளாளர் அரசியல் எழுச்சி மாநாடு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
மாநாடு வெற்றிபெற தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்களை திரட்டி வரவும், தூத்துக்குடி மையப்பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி சுந்தரலிங்கனாருக்கு சிலை அமைத்து தர தூத்துக்குடி பாரளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலேசனை கூட்டமானது மாவட்ட செயலாளர் வாலமணிபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட தலைவர் ராஜவேல்பாண்டியன், ராமர் தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுதாகர்,
மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் நிம்முபாண்டியன், ஆழ்வார் திருநகரி மாணவரணி செயலாளர் அலெக்ஸ், மற்றும் தூத்துக்குடி நகர செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.