தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் “அருள்மிகு” “ஸ்ரீ ” ஆனந்த விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, காடல்குடி “அருள்மிகு” “ஸ்ரீ” தேவி பூமி தேவி ஸ்மேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவிலும் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
பின்னர், விளாத்திகுளம் அய்யனார்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபம் திறப்பு விழாவில் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.