தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே வேடபட்டியை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது இல்லத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் பாண்டியன் கிராம வங்கி கிளை மேலாளர் ஆதிலிங்கம் மறைவிற்கு அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், வார்டு கவுன்சிலர், கலைச்செல்வி செண்பகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.