தூத்துக்குடி, விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் தெற்கு ஊராட்சி, தென்மயிலை நகர் பகுதியில் பகுதிநேர நியாய விலை கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர்
ஆரோக்கியராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனாமேரி, ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா, தொடக்கக் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ராஜன், கிளைச் செயலாளர்கள்
முனியசாமி, செல்வம் ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் மரியசிங்கம் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.