Thupparithal
ஆன்மிகம்

திருச்செந்தூா் கோயிலில் டிச.16 முதல் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி!.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் டிச. 16 ஆம்தேதி முதல் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல் பயிற்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது; திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுற்றுவட்டார பள்ளி மாணவா், மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல்கள் பாட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயிலில் டிச. 16-ஆம் தேதி முதல் ஜன. 4-ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பயிற்சி நடைபெறுகிறது. எனவே, மாணவா், மாணவிகள் பங்கேற்று பயனடையுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

திருச்செந்தூா் கோயிலில் பிப். 5ல் தைப்பூச திருவிழா : அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு

Admin

தூத்துக்குடி, புனித சவேரியார் ஆலய 134-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்; ஏராளமானோர் பங்கேற்பு.

Admin

பிரமாண்டமாகிறது திருச்செந்தூர் கோவில் வளாகம்: ரூ.300 கோடியில் மேம்படுத்த முடிவு…

Admin

Leave a Comment

error: Content is protected !!