தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மார்பளவு சிலை வைக்க மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ-டம் ஓபிஎஸ் அணியை சாந்த அதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏசாதுரை கோரிக்கை மனு அளித்தார்.
அந்தக் மனுவில் கூறிப்பிட்டிருப்பதாவது; தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் பூங்காவில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயர் பலகை மட்டும் உள்ள நிலையில் அவருக்கு மார்பளவு சிலை வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை மனு வழங்கும் பொழுது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் உடனிருந்தனர்.