விளாத்திகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பாக டி.டி.வி தினகரன் 60வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் செல்வி நேதாஜி, கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் முத்துராமலிங்கம், ஒன்றிய அவைத் தலைவர் வடிவேல் முருகன், ஒன்றிய இணைச் செயலாளர் முத்து கணேஷ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைத் தலைவர் செல்ல பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் சுந்தரகணபதி, சங்கரேஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி கோட்டை தங்கம், நிர்வாகிகள் செல்லப்பாண்டி, இந்துமதி, ராமஜெயம், அழகுமலை, பிரபா, முத்துலிங்கம், மற்றும் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்