இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2023 பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்களான, கேபிள் டி.வி. தொழிலை பாதுகாத்திட மின்சார வாரிய முடிவினை கைவிட வேண்டும். கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வேலை கிடைக்காமல் குறைந்த முதலீட்டில் சுயமாக ஒரு தொழிலாக தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் (நபர்கள்) இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசும், மின் வாரியமும் மின் கம்பத்தில் வயர் கட்டுவதை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவித்தது. அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் பைபர் நெட் வயர் உள்ளிட்டு அனைத்து கேபிள் நிறுவனங்களும் மின்கம்பத்தில் தான் கட்டுகின்றனர். ஆனால், தற்போது மின்வாரிய தலைவர் நாங்கள் அப்புறப்படுத்த மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.
தனியார் பெரும் நிறுவனங்களான செல்போன் நிறுவனங்கள் உதாரணத்திற்கு ஜியோ, ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் ஒன்றிய அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் செல்போன் டவரைத்தான் பயன்படுத்தி 5ஜி சேவையே அனுபவிக்கிறார்கள். இவர்கள் சாதாரண தொழில் முனைவோர் கூட கிடையாது. இருந்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது செல்போன் டவரை பயன்படுத்த அனுமதிக்கின்றது.
எனவே, மின்சார கம்பத்தில் கேபிள் டிவி வயரை கொண்டு செல்வதற்கு மின்சார வாரியமும், தமிழ்நாடு அரசும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் குறைந்தபட்ச வாடகை என ஒரு தொகை கூட முடிவு செய்து மாதா மாதம் மின்சார கட்டணம் போன்று வாங்கலாம்.
இது நிறுவனத்திற்கும் ஒரு தொகை கிடைக்கும். கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கும் உதவியாக இருக்கும். எனவே தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.