தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் இரயில் நிலையம் வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கக்கூடிய ரயில் சேவையை இப்பகுதி மக்கள் அதிகம் ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக, கொரோனா கால கட்டத்திற்கு முன்பு புனலூர் மதுரை, கொல்லம், சென்னை, தூத்துக்குடி, மைசூர், விரைவு ரயில் நாகர்கோவில் மும்பை, உள்ளிட்ட ரயில்கள் கடம்பூர் ரயில் நிலையத்தில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு நின்று சென்றன. தற்போது இந்த இரயில்நிலையத்தில் அனைத்தும் நிற்காமல் செல்கின்றன. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வியாபாரம் பாதிப்படைந்து வருவதாகவும், இதனால் நின்று சென்ற இரயில்கள் அனைத்தும், மீண்டும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கடம்பூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், காவல்துறை அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் பொதுமக்கள் என 80க்கும் மேற்பட்டோரை மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
போராட்டக்காரர்கள் அமைத்திருந்த சாமியான பந்தலையும் போலீசாரே அப்புறப்படுத்தி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.