தூத்துக்குடியில், புகழ் பெற்ற பழமையான சங்கரராமேஸ்வரர் உடனுறை சிவன்கோவில் அமைந்துள்ளது. சனிப்பிரதோஷம், சிவராத்திரி இரு நிகழ்வுகள் ஓரே நாளில் வந்ததையொட்டி சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு அதனைத் தொடர்ந்து சிவராத்திரியை முன்னிட்டு 216 சிவலிங்க பூஜை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து சிவராத்திரியை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமமக்கள், பக்தர்கள் வந்து செல்லும் வகையில் நான்கு கால சிறப்பு பூஜைகள் அபிஷேகத்துடன் ஒம் நமசிவாய பக்தர்கள் எழுதினார்கள். கோவில் கலையரங்குகளில் நாதஸ்வரம், பரதநாட்டியம் மாறுவேட போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் தலைமையில், நிர்வாக செயல் அலுவலர் தமிழ்செல்வி, அரசு துறை அதிகாரி இசக்கியப்பன், பிரதோஷ கமிட்டி தலைவர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கந்தசாமி, ராதாகிருஷ்ணன், கோவில் நிர்வாகத்தை சார்ந்த நெல்லையப்பன், கல்யாணி, செல்வ மாரியப்பன், கணக்கர் சுப்பையா, உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.