தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை அடுத்து விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனம் மற்றும் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஒன்றான திருத்தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி திருத் தேரோட்டம் நடைபெற்றது இதில் திரளான பொதுமக்கள் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
10 திருவிழாவான நாளை அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதலும், 11ஆம் நாள் திருவிழா மதியம் அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சிவும் 12 திருவிழா காலை அம்பாள் பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.