Thupparithal
ஆன்மிகம்

தை அமாவாசை தினம்; திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் ஏராளமானோர் எள், அன்னம் கொண்டு வேத மந்திரங்களை முழங்கி தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் “சுப்பிரமணியசுவாமி” கோவில் கடற்கரையில் தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

தை, ஆடி அம்மாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் ஆண்டு முழுவதும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது. அந்த வகையில்,
சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம், தர்ப்பபுள் வைத்து பிண்டம் வளர்த்து வேத மந்திரங்களை முழங்கி தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4-00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது . தொடர்ந்து 04-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 5-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடரந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

Related posts

தூத்துக்குடி- மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா இன்று (ஆக25), கொடியேற்றத்துடன் தொடங்கியது!

Admin

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு பிரமாண்ட ஏற்பாடு; திருக்கோயில், இணை ஆணையர் அறிக்கை!.

Admin

தூத்துக்குடி: கிறிஸ்தவ ஆலயங்களில் தவக் காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Admin

Leave a Comment

error: Content is protected !!