சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்தும் அதிமுக கட்சியின் தற்காலிக பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான SP. சண்முகநாதன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியினர், தொண்டர்கள் தூத்துக்குடி கட்சி அலுவலகமான ஜெயராஜ் ரோட்டில் இருந்து நடந்தே சென்று தமிழ் சாலை ரோட்டில் உள்ள அண்ணா சிலை சிக்னலில் தரையில் அமர்ந்து விடியா அரசே, திமுக அரசே, ஸ்டாலின் அரசே, விடுதலை செய் விடுதலை செய் என்று முழக்கத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்பு இவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்