சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்த நாள் விழா நேற்று (ஜூலை 11), வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் மணிமண்டபம் உள்ளது. இங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்தனர்.
அப்போது, மதுரை திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் நுழைவு வாயில் மீது சிலர் ஏறி சமுதாய கொடியை ஏற்றிய போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை கீழே இறக்கி விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 க்கும் மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.. மறியலில் ஈடுபட வேண்டாம் என காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் கலைந்து போக கூறியும் கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டு கோயில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட70 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.