தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்றதிற்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் பல இடங்களில் குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஐனதா கட்சி சார்பில் வடக்கு ஒன்றிய தலைவர் செல்வராஐ் தலைமையில், துணைத்தலைவர் சத்யராஐ் ஏற்பாட்டில் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், விளையாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சக்தி வேல்ராஐ், ஓபிசி அணி பொதுசெயலாளர் சரவணக்குமார், கட்சி நிர்வாகிகள் லெனின், பொன்மாடசாமி, ஆறுமுகம், மகேஷ், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது