Thupparithal
செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நவீனப்படுத்தி ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் நிறுவன தலைவர் பேட்டி!.

தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் கடுமையான மின் கட்டண உயர்வால் மக்கள் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர். அனல் மின்சாரமும், அணு மின்சாரமும், காற்றாலை மின்சாரமும், தயார் செய்யப்படும் தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கணக்கீடு செய்வதை மாற்றி மற்ற பிற மாநிலங்களில், வீட்டு உபயோக மின்சாரம் 300 யூனிட் இலவசமாக கணக்கீடு செய்வது போல் தமிழகத்திலும் வீடு உபயோக மின்சாரத்திற்கு 300 யூனிட் இலவச கணக்கீடு செய்ய தமிழக முதல்வரை தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் கோருகிறது.

அணு மின்சாரம் தயார் செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அணு மின் உலை ஆபத்தை துணிவாக எதிர் கொள்ளும் தமிழக மக்களுக்கு அவர்களின் வீட்டு உபயோக மின் இணைப்பில் 300 யூனிட் இலவச கணக்கீடு செய்வதற்கு மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் கோருகிறது.

தென் இந்தியாவின் துறைமுக தொழில் நகரமான தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் அதன் உற்பத்தியை துவக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நவீன பாதுகாப்போடு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையிலும் தூத்துக்குடி மாநகர மக்கள் சுகாதாரம், வியாபாரம், வேலைவாய்ப்பு, பண புழக்கம், பெற ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க மத்திய மாநில அரசுகளை தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் வேண்டுகோள் விடுகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் நலனுக்காகவும், வணிகர்கள் நலனுக்காகவும், நிறைவேற்றிட மத்திய மாநில அரசை வலியுறுத்துகிறது. மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றால் அடுத்த கட்டமாக கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சென்னையில் தொடர் ஆர்பாட்டங்கள் நடத்த தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் முன்னெடுக்கும். என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அருகில், மாவட்ட தலைவர் தாளமுத்து, மாவட்ட பொருளாளர் முத்து, துணை தலைவர் எபனேசர் எபி, மாநகர தலைவர் லிங்க செல்வன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் நெல்லை ஆனந்தன், நிர்வாகிகள் முருகன் மற்றும் ஐயப்பன், ஆகியோர் உடனிருந்தனர்

Related posts

அவசர கோலத்தில் நடந்து முடிந்த குரூஸ் பர்னாந்து நினைவு மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா; அரசு விழா போல் இல்லாமல் சினிமா சூட்டிங் முடித்து விட்டு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கிளம்பி சென்றதாக பொது மக்கள் குற்றச்சாட்டு!.

Admin

வரலாற்று ஆவணங்கள் இருந்தால் அரசுக்கு வழங்கலாம் : ஆட்சியர் தகவல்

Admin

தமிழ்நாடு ஹச் எம் எஸ் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!