Thupparithal
அரசியல்

திமுக ஆட்சியை கலைப்பதாக இருந்தால் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் மணிப்பூரை புடுங்கி விட்டு இங்கே புடுங்கு-கலைஞர் நூற்றாண்டு விழா பொது கூட்டத்தில் ஆவேசமாக பேசிய எம்பி ஆ.ராசா.!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக துணை பொது செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ. இராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், ஆ.ராசா பேசுகையில், எல்ஐசியில் மக்கள் போடும் பணத்தை பல லட்சம் கோடி அதானியிடம் முதலீடு செய்தார் மோடி, ஓஎன்ஜிசி, பெட்ரோலிய நிறுவனங்கள் பல லட்சம் கோடி பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்கின்றனர். இதற்கு மோடியே அரசு விமானத்தில் வெளிநாட்டிற்கு கூட்டி சென்று அந்நாட்டில் பேசி ஒப்பந்தம் கையெழுத்தாகி அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக அதானிக்கு கார்ப்பரேட் மதிப்பு கூடுகிறது.. உலகத்தினுடைய முதல் பணக்காரனாக மோடியால் அதானி வருகிறார். 9 ஆண்டு காலத்தில் உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரராக மாறுகிறார். அவர் என்ன செய்தார் என்று ஹிண்டன்பர்க் என்ற உளவுத்துறை நிறுவனம் வெளியே கொண்டு வந்தது. அதானி பங்குகளை கூட்டி காமித்து ஒரு பெரிய பிம்பத்தை இந்தியாவில் உருவாக்கினார். இந்த நிறுவனம் மீது வழக்கு போட துப்பில்லை.. இது குறித்து மோடியிடம் கேட்டதற்கு பதில் இல்லை… கப்சின்னு உள்ளார். இதனை பெங்களூரில் ஒரு நபர் ட்விட்டர் பதிவு செய்ததார் என்று அவரை ஜெயிலில் போட்ட நீங்கள், வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் என்னை பிடித்து உள்ளே போடு.. ஏனென்றால் நீ ஒரு பிராடு, அதான் அமைதியாக இருக்கின்றாய். என்ற அவர், என் மீது ஒரு லட்சத்தி எழுபத்தி 6,000 கோடி குற்றச்சாட்டு வந்தது. நான் ஓடி ஒழியவில்லை. 15 நாள் சிபிஐ அலுவலகத்தில் வைத்து 16-வது நீதி மன்றத்திற்கு கூட்டிக் சென்றனர். அப்போது நீதிபதியுடம் நான் கூறியது ஒரே ஒரு டாலரை வெளிநாட்டில் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் வாழ்க்கை முழுவதும் சிறையில் இருக்கின்றேன் என்றேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நானே வாதாடி சாட்சி சொல்லி உடைத்து வெளியே வந்தேன்.. அதனால் எனக்கு மோடியை கேட்க யோக்கியம் இருக்கின்றது. தகுதி உள்ளது. பதில் சொல் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தால் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்,

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்டம் சரியில்லை என்கின்றனர். நீங்கள் ஆளுகின்ற மணிப்பூரில் என்ன நிலைமை, அங்கு முதலமைச்சர் வெளியே வர முடியவில்லை. கவர்னர் வெளியே வர முடியவில்லை. அதைவிட கொடுமை அங்கு உள்ள மத்திய அமைச்சர் வீடு தரைமட்டமாக்கப்படுகிறது. காவல்துறையின் 150 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு போய் விட்டனர். அதைப் பற்றி இதுவரை மோடி வாயை திறக்கவில்லை.

திமுக ஆட்சியை கலைப்பதாக இருந்தால் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் மணிப்பூரை புடுங்கி விட்டு இங்கே புடுங்கு… 200 தேவாலயங்கள் இடிக்கப்பட்டு இருக்கிறது.. 50 கோவிலை காணவில்லை.. துப்பாக்கி காணவில்லை. யார் யாரை சுட போகிறார் என்று தெரியவில்லை. அங்கு சட்டம் உனக்கு நன்றாக உள்ளது.. தமிழகத்தில் கெட்டுப்போய் உள்ளது என்று ஆளுநர் ரவி கூறுவது அவருக்கு புத்தி கெட்டுப் போய்விட்டது…. மோடியை எதிர்த்து எதிர்அணிக்கு தலைமை தாங்குகின்ற வல்லமை முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. வேற எவருக்கும் இல்லை என்று கருதிகின்றனர். அது உண்மை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுலில் இந்தியாவில் அரசியல் சட்ட அமைப்பு காப்பாற்றுவதற்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற அவர் தலைமையில் தேசத்தை மீட்டெடுப்பும் அரசியல் சட்டத்தை காப்பாற்றுவோம் என்றார்…

Related posts

மக்களை ஏமாற்றும் திமுக-விற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தமிழகத்தின் முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும்-தூத்துக்குடி, பாஜக மகளிரணியினர் ..!

Admin

கோவில்பட்டி அருகே புதிதாக அமையவுள்ள இந்தியன் வங்கி இடத்தினை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

Admin

பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள உறவு பற்றி சந்தேகம்; தூத்துக்குடி மாநகர காங்கிரசாரின் நூதன போராட்டத்தில் கல்லுரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு அஞ்சல் போட்டியில் மனு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!