தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, தமிழ்ச்செல்வி, தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ முன்னிலையில் பாரதிய ஜனதா ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் மகாதேவன், மறவர் காலனி அமமுக கிளைச் செயலாளர் விக்னேஸ்வரன், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள கணேஷ் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணியையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், நாகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ், அம்பிகை பாலன், பழனிகுமார், பழனி முருகன், ஜெய்சிங், குழந்தை ராஜ், ஜெயந்தி சரவணசாமி, கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.