Thupparithal
க்ரைம்

கேரளாவில் இருந்து முறைகேடாக கடத்திவரப்பட்ட ரூபாய் 7.50 லட்சம் மதிப்புள்ள 8,500 லிட்டர் பர்னஸ் ஆயில் லாரியுடன் பறிமுதல்; குற்ற புலனாய்வுத்துறையினர் நடவடிக்கை

தூத்துக்குடி -மதுரை பைபாஸ் சாலையில் புதூர் பாண்டியாபுரம் அருகே குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட ஒரு லாரியை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டுமே விற்பனை செய்யக்கூடிய பர்னஸ் ஆயிலை எவ்வித ஆவணமின்றி முறைகேடாக கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கடத்தி வந்து தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து லாரியை ஒட்டி வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தர்மராஜ்ஜை கைது செய்ததுடன் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பிலான 50 பேரரல்களில் கொண்டுவரப்பட்ட சுமார் 8,500 லிட்டர் பர்னஸ் ஆயிலை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த சாலமோன் அற்புதராஜ் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சம்சுதீன் ரபிக் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related posts

திருநங்கைகள் பொதுமக்களிடம் அடாவடி செய்தால் அவசர போலீஸ் தொலைபேசி எண் …. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு!

Admin

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.25கோடி மோசடி வழக்கு: பெண் துணைச் செயலா் கைது.

Admin

தூத்துக்குடியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு!

Admin

Leave a Comment

error: Content is protected !!