Thupparithal
க்ரைம்

தூத்துக்குடி, இனிகோ நகர் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 10 லட்சம் மதிப்பிலான 1250 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!.

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு வழியாக பீடிஇலை, கஞ்சா ,மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சர்வ சாதாரணமாக கடத்தப்பட்டு வருகின்றன இதை தடுக்கும் நடவடிக்கையில் தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு ஆய்வாளர் அனிதா தலைமையிலான க்யூ பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

இதைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் நேற்று இரவு தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் இருந்து படகு மூலம் பீடிஇலைகள் கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். இதில் ஒரு டாட்டா ஏஸ் வாகனம் மூலம் 40 பண்டல்களிள் 1250 கிலோ பீடி இலைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ் வாகனம் மற்றும் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 1250 கிலோ பீடிஇலை பன்டல்களைகீயூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தருவைகுளம் மற்றும் தூத்துக்குடி இனிகோநகர் பகுதிகளில்இருந்து இலங்கை கடத்தப்பட இருந்த சுமார் 3000 கிலோ பீடிஇலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

தூத்துக்குடியில் இருசக்கர வாகனங்களை திருடிய 4பேர் கைது; தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் அதிரடி!.

Admin

தூத்துக்குடியில் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிக் கொலை: பயங்கரம்!

Admin

தூத்துக்குடி, தனியார் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி; பரபரப்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!