பிரதோஷ தினம் சனிக்கிழமையில் வருவது சிறப்பு வாய்ந்ததாகும். ஆனி மாதம் கடைசி சனி கிழமையான இன்று (ஜூலை 15) பிரதோஷம் தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சனி பிரதோஷத்தை ஒட்டி சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் பால் தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கிரிவலப் பாதையில் சுவாமி அம்பாள் வெள்ளிமேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர், சுவாமி அம்பாள் நந்தியபெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாள் நந்தியபெருமானை தரிசித்து சென்றனர்.