இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற என்ன ஓட்டத்தில் பனை விதைகள் விதைத்தல் விழா மற்றும் சமூக விழிப்புணா்வு பேரணியானது நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியாா்புரத்தில் பனைமரத் தோப்பில் பனை விதைகளை சமூக நலன்-மகளிா் உாிமைத்துறை அமைச்சா் விதைத்தார். அதனைத் தொடா்ந்து மகளிா்கள், அருட்தந்தையா்களும் பனை விதைகளை விதைத்தனா்.
நிகழ்வின் முன்னதாக கோல்பிங் இந்தியா தேசிய இயக்குனா் மாியசூசை வரவேற்புரையாற்றினாா். தூத்துக்குடி சமூக சேவை சங்க செயலா் அருட்பணி அமலன் மற்றும் அந்தோணியாா்புரம் பங்கு தந்தை ஸ்டீபன்மாியதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தாா். தூத்துக்குடி சமூகசேவை சங்க நிதி நிா்வாகி அருட்பணி ஜான்சுரேஷ் நன்றியுரையாற்றினாா்.
பின்னர், விழிப்புணா்வு பேரணியை தூத்துக்குடி டி எஸ் பி சுரேஷ் துவக்கிவைத்தார். நிகழ்வில், திரளான மகளிா்களும் பனைமர பாதுகாப்பு சமூக ஆா்வலா்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.