தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் ராஜகோபால் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் வலிமையாக, தைரியமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யோகா நிகழ்ச்சி நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ரவீணா, மாணவன் சாய் விஷ்வா உள்ளிட்டோர் பங்காற்றினர். 43 எடை கொண்ட மாணவி ரவீணா முட்டை மீது சாந்தி ஆசனம், பத்மாசனம், செய்து அசத்தினர். இதனைக் கண்டு அனைவரும் கைதட்டி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.
சிறப்பாக யோகாசனம் செய்து அசத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி வழங்கினார்.
இந்நிகழ்வில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இயக்கம் ராஜன், தொழிலதிபர் பாலசுப்பிரமணியம், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் நிறுவனர் யோகா சுரேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி கௌதம் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், தொழிலதிபர் நடராஜன், மாணவியின் பெற்றோர் விஜயன், ரம்யா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.