தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்த நிறுவனம் சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட வேலை சம்பந்தமாக ஸ்டெர்லைட் ஆலை தரப்பினர் ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறி மனு அளிக்க வந்தார்.
இது குறித்து கட்டிட பணி செய்து வந்த மாதவன் கூறுகையில், சென்னை கணபதி நகரில் உள்ள SHA கன்ஸ்ட்ரக்சன் என்ற தனியார் நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி கண்ஸ்ட்ரக்சன் ஆக ஒப்பந்த பணியில் கட்டிட வேலை செய்து வந்தோம். 2015-2017 வரை பார்த்து வந்த பணி காரணமாக ஒரு கோடியே 92 லட்சம் ரூபாய் அதற்கான பணம் தரவில்லை.. மேலும், எங்களுடைய பொருட்களும் பணி செய்யும் தளவாடல்கள் எல்லாம் ஆலையில் இருந்து திரும்ப எடுக்க முடியவில்லை…
இது குறித்து பலமுறை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கேட்டபோது இழுத்தடிக்கின்றனர்.. ஆகவே ஸ்டெர்லைட் ஆலை மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து பணம் பெற்று வழங்குமாறு கேட்டு கொண்டார்.