Thupparithal
க்ரைம்

தூத்துக்குடியில், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த அண்ணனை அடித்து கொன்ற தம்பி தூத்துக்குடியில் பரபரப்பு!.

தூத்துக்குடி, சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் லாரி டிரைவர் இவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாடியுள்ளார். இதன் காரணமாக தன்னிடமிருந்த பல லட்ச ரூபாய் பணத்தை இழந்துடன் தனது தம்பி நல்ல தம்பி ரூபாய் 3 லட்சம் கடனாக வாங்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில், நல்லதம்பி தனது அண்ணன் முத்துராஜிடம் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதற்கு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மேலும் சில்லா நத்தம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டையும் விற்பனை செய்து தனக்கு பணம் தர வேண்டும் என நல்ல கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முத்துராஜ் நேற்று இரவு தனது தம்பி நல்ல தம்பியை பண்டாரம் பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர், இன்று காலை புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பண்டாரம்பட்டி காட்டுப்பகுதியில் கிடந்த முத்து ராஜின் உடலை சிப்காட் காவல் துறையினர் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு ஊரக துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நேரடியாக வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

அண்ணன் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரமடைந்த தம்பி இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.25கோடி மோசடி வழக்கு: பெண் துணைச் செயலா் கைது.

Admin

கேரளாவில் இருந்து முறைகேடாக கடத்திவரப்பட்ட ரூபாய் 7.50 லட்சம் மதிப்புள்ள 8,500 லிட்டர் பர்னஸ் ஆயில் லாரியுடன் பறிமுதல்; குற்ற புலனாய்வுத்துறையினர் நடவடிக்கை

Admin

தூத்துக்குடியில் உள்ள பிரபல வெஜிடபிள் மார்க்கெட்டில் தங்களது பங்குகளை தராமல் ஏமாற்றி வருவதாக வெஜிடபிள் மார்க்கெட் தலைவர் மீது இளைஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்..!

Admin

Leave a Comment

error: Content is protected !!