தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ளது தூத்துக்குடி வெஜிடபிள் மார்க்கெட் கம்பெனி பிரைவேட் லிமிடெட். இந்த காய்கறி சந்தை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.. இந்த மார்க்கெட்டில் தற்போது தலைவராக உள்ள சுந்தர பாண்டியன் மற்றும் அவரது உடன் பிறந்த தம்பிகளான பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்துள்ளனர்..
இந்நிலையில் இந்த மார்க்கெட்டில் பங்குதாரராக இருந்த பாக்கியராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு இறந்துவிட பாக்யராஜின் பெயரில் இருந்த ஏழு பங்குகளை மார்க்கெட் தலைவர் சுந்தரபாண்டியன் அவரது உறவினர் பெயருக்கு போலியாக மாற்றியதாக கூறப்படுகிறது….
இதைத்தொடர்ந்து, பாக்கியராஜின் வாரிசுதாரரான சதீஷ் ஞானராஜ் என்பவர் மார்க்கெட் தலைவரிடம் சென்று தனது தந்தை பெயரில் இருந்த ஏழு பங்குகளுக்குரிய பங்குத் தொகையை தரும்படி கேட்டுள்ளார்.. ஆனால் மார்க்கெட் தலைவர் சுந்தர பாண்டியன் பாக்கியராஜ் அந்த பங்குகளை விற்று விட்டதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது தந்தை பெயரில் பங்குகள் இருப்பதற்கான சான்றிதழ்கள் தங்களிடம் இருக்கும் நிலையில் போலியாக மோசடியாக ஆவணங்கள் தயாரித்து தனது பெரியப்பா சுந்தரபாண்டியன் பங்குகளை அவரது உறவினர் பேருக்கு மாற்றியுள்ளதாகவும், பங்குத் தொகையை தராமல் மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட சதீஷ் ஞானராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்..