தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (64). இவர் படுக்கபத்தில் டீகடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 19ஆம்தேதி அவரது ஊருக்கு பைக்கில் சென்றபோது அங்கு நடந்து சென்ற 60 வயது பெண்ணை அழைத்து சென்று அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் குரூஸ் மைக்கேல் வழக்குபதிந்தார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி விசாரணை நடத்தி தலைமறைவான முருகனை தேடி வந்தார்.
இதனையடுத்து சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர், டேவிட் கிறிஸ்துராஜ், முதல் நிலை காவலர்கள் சுதன், அகஸ்டின் உதயகுமார், காவலர் அருண் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தலைமறைவான முருகனை தேடி வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் விலக்கு பகுதியில் போலீசை கண்டதும் பதுங்கி நின்று கொண்டிருந்தபோது முருகனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.