தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையத்திற்குள் இரவு 8 மணி காலை 6 மணி வரை அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாமாகவினர் காதில் பூ சுற்றி மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்..
கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்த பொழுது அவர் நீண்ட நேரமாகியும் வராததால் கோட்டாட்சியர் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.