தூத்துக்குடியில், தூத்துக்குடி கள்ளி கிரிக்கெட் சீரிஸ் கிளப் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆறு ஓவர் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
நாக்அவுட் முறையில் நடைபெற்ற இந்த ஆறு ஓவர் கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டியில் தூத்துக்குடி யுஎஸ்ஏ கிரிக்கெட் கிளப் அணியும் சார்க்ஸ் கிரிக்கெட் கிளப் அனிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய யு எஸ் ஏ தூத்துக்குடி அணி ஆறு ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சார்க்ஸ் அணி ஆறு ஓவரில் 43 ரன்கள் மட்டுமே எடுத்தது இதை அடுத்து மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி யுஎஸ்ஏ அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்க பணத்தை தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் கல்லி கிரிக்கெட் போட்டி நிறுவனர் சாவித்திரி ஆகியோர் வழங்கினார்.