தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் மாப்பிள்ளையூரணி குளம் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி பொதுமக்கள் சாலை வசதி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், சில பணிகள் நல்ல முறையில் செய்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமாருக்கு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கிராமசபை கூட்டத்தில் பேசுகையில்: இந்த ஊராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் போது முறையாக எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். திமுக ஆட்சி அமைந்த பின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் படி சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதி மக்களின் நலனில் முழு அக்கறை கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. அதே போல் அனைத்து பகுதிகளுக்கும் ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு இடையூறாக இருக்க கூடிய சில ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதையும் கருத்தில் கொண்டு நம்முடைய ஊராட்சி மக்கள் தாமாகவே முன்வந்து குடிநீர் இணைப்பிற்கு இடையூறாக இருப்பதை அகற்றி ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். அனைவருடைய நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்ற தாரக மந்திரத்தோடு பணியாற்றுகிறோம்.
இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் தனது இல்லங்களில் சேரும் தேவையற்ற கழிவு பொருட்களை சாலையில் கொட்டாமல், தூய்மை காவலர்களிடம் கொடுத்து சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முதலமைச்சருக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்கள் துணை நிற்க வேண்டும் என்று சரவணக்குமார் பேசினார்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி வளர்ச்சி குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகஅரசின் உத்தரவுபடி தூய்மை காவலர்களை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து பாராட்டினார்.
கூட்டத்தில், தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வேளாண்மை துறை உதவி விதை அலுவலர் கபில்ராஜ், கால்நடை ஆய்வாளர் பாபு சௌந்தர், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் முகமது ஆஷிக் அரபி, பிரதீப் குமார், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாரிமுத்து, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, சக்திவேல், தங்கபாண்டி, திமுக கிளை செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, மகளிர் சுயஉதவிக் குழு தலைவி பிரேமா, தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.