Thupparithal
அரசியல்

தூத்துக்குடியில் “இல்லம் தோறும் இளைஞரணி” உறுப்பினர் சேர்க்கை முகாம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக அண்ணா நகர் பகுதி இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமானது வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மதியழகன் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது,

சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு “இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை அண்ணா நகர் 12 வந்து தெரு பகுதி துவக்கி வைத்தார்.

அண்ணா நகர் மேற்கு பகுதியில் ஏற்பாடு செய்யபட்டு இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டமாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் மாலை அணிவித்து, செங்கோல், மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது கிழக்கு ஒன்றியம் சார்பில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ் மோகன் செல்வின், ஆறுமுகம் இளைஞரணி நகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த கேபியல்ராஜ், அண்ணா நகர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் செல்வின், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல் ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், நகர் மன்ற குழு தலைவர் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, பொன்னப்பன், இசக்கிராஜா, சரவணன்,
பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, திமுக பிரதிநிதி அருணாசலம், திமுக கழக பேச்சாளர் சரத்பாலா மற்றும் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மகளிரணியினர், மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழக மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க கூடியவர் முதல்வர் ஸ்டாலின்-மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு!.

Admin

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்; கோவில்பட்டி கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

Admin

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி-க்கு அமைச்சர் எம்எல்ஏ நேரில் வாழ்த்து!

Admin

Leave a Comment

error: Content is protected !!