தூத்துக்குடி தாமோதரன் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கயல்( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் வீட்டில் பெற்றோரை எதிர்த்து பேசுவதாகவும், பள்ளியில் சரியாக படிக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பள்ளி நிர்வாகம் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து மாணவி சரியாக படிக்கவில்லை என்பதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று மாணவிக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் பள்ளியில் விசாரணை நடத்தினார்.
ஏற்கனவே, நேற்று முன் தினம் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவியை அடித்து துன்புறுத்துவதாக நேற்று பிரச்னை எழுந்த நிலையில், இன்று ஆசிரியர்களிடம் பெற்றோர் புகார் கூறியதால் மனம் உடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.